அரவிந்த்சாமிக்கு ஜோடியாக 4 நாயகிகள்

மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அரவிந்த்சாமி, உதிரிப்பூக்கள் மகேந்திரன் இயக்கிய சாசனம் படத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகியிருந்தார். பின்னர், மீண்டும் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தவர், மோகன்ராஜா இயக்கிய தனிஒருவன் படத்தில் வில்லனாக நடித்து மறுபடியும் அனைவர் மனதிலும் இடம்பிடித்தார்.தற்போது அரவிந்த்சாமி, டியர் டாட், போகன், துருவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில்,செல்வா இயக்கவுள்ள ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார் அரவிந்த்சாமி.கமர்சியல் கதையில் உருவாகும் அந்த படத்திலும், நான் அவனில்லை படம் போன்று அரவிந்த்சாமியுடன் 4 நாயகிகள் நடிக்கிறார்கள். அந்த வகையில், இனியா, வேதிகா உள்ளிட்ட சில நடிகைகளிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.