அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரசன்னா !

அஞ்சாதே' படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகர் பிரச்சனா, மீண்டும் வில்லனாகவிருக்கிறார். 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்குகிறார். படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.