அருண் விஜய்யும் மகிழ் திருமேனியும் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியவுள்ளனர் !

கடந்த மாதம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், ஸ்மிருதி வெங்கட், தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், உள்ளிட்ட பலர் நடிப்பில் தடம் என்ற படம் வெளியாகி மக்களிடையே நல்ல வர்வேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம் மகிழ் திருமேனி. இந்த கதை முழுமையாக முடித்து, பிறகு இந்த படத்தை முடித்துவிட்டு, இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அருண் விஜய்யை வைத்து படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். அருண் விஜய்யுடன் ஏற்கனவே தடையறத் தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுக்கு வெற்றிமாறன்… அருண் விஜய்க்கு இவரோ என தோன்றுகிறது.