அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானி

அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து வரும் அருண் விஜய் நடிக்கும் புதுப்படம், மாஃபியா. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை  அமைக்கிறார். படத்தை இயக்கும் கார்த்திக் நரேன் கூறுகையில், 37 நாட்களில்  முழு படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம். தடம் பார்த்த பிறகுதான் இதில் அருண் விஜய்யை நடிக்க வைக்கும் எண்ணம் ஏற்பட்டது. படத்தில் அவர் கேங்ஸ்டர் இல்லை. வடசென்னையிலும் கதை நடக்கவில்லை. பிரசன்னா, பிரியா பவானி சங்கர் இருவருக்கும் மிகவும் வித்தியாசமான வேடம் என்றார்.