அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது.. அருகில் அத்திவரதர்!

காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அங்கு கூட்டம் அலைமோதுகிறது.ஏராளமான பிரபலங்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேற்று அத்திவரதரை தரிசித்தார். இதனால் காஞ்சிபுரம் நகரமே பரபரப்பானது. இந்நிலையில் அத்திவரதரை நயன்தாரா தரிசித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், அத்திவரதர் சிலை முன்பு நயன்தாரா நிற்கிறார். அர்ச்சகர்கள் அனைவரும் நயன்தாராவை பார்த்தபடி இருக்கிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள், அர்ச்சகர்கள் நயன்தாராவை தரிசித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் அத்திவரதர், என கமெண்ட் செய்துள்ளனர்.