அர்ஜுனின் சர்வதேச தரத்திலான நடிப்பை கண்டு ரசித்தேன் – விஜய் ஆண்டனி !

ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலைகாரன். க்ரைம் திரில்லர் படமான இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் அர்ஜுன், விஜய் ஆண்டனி, இயக்குனர் சசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படம்பற்றி விஜய் ஆண்டனி கூறுகையில், நண்பர் ஆண்ட்ருவுடன் வேலை பார்த்தது சந்தோஷமான விஷயம். எதுக்குமே சமரசம் செய்துகொள்ளாத இயக்குனர் அவர். படத்தை சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டில் முடித்து கொடுத்து விட்டார் அவர் நன்றாக வர வேண்டும். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் நடிப்பை பார்த்து ரசித்தேன். சர்வதேச தரத்திலான நடிப்பை அவர் தந்திருக்கிறார். அவரை பார்த்து நடிக்க கற்றுக்கொண்டேனா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது நடிப்பை பார்த்து வியந்தேன். அர்ஜுன் வந்த பிறகு தான் இந்த படம் பெரிய படமாக மாறியது. இவ்வாறு அவர் கூறினார்.