அர்ஜுன் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம்!

மணி ரத்னம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், அரவிந்த்சாமி, அர்ஜுன் நடித்து வெளியான படம் கடல். இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார். அதன் பிறகு, தற்போது மீண்டும் அர்ஜுன் அரவிந்த் சாமி இருவரும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை சதுரங்க வேட்டை-2 இயக்குனர் நிர்மல் குமார் இயக்கவுள்ளாராம். இதிலும் அர்ஜுன் வில்லனாக தான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இவர் இயக்கிய சதுரங்க வேட்டை 2 படம் இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்த படத்தை எடுக்க தயாராகியுள்ளார்.