அர்ஜூன்னின் முதல்வன் பாணியில் நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் அந்த​ வகையில் மாயா, டோரா படங்களுக்குப்பிறகு மீஞ்சூர் கோபி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத படத்தில் கலெக்டராக நடித்துள்ளாராம்.இந்த படத்தில் தண்ணீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் பொது மக்கள் பிரச்சினை தீர்த்து வைக்கும் ஒரு சிறந்த கலெக்டராக நடித்துள்ளாராம் நயன்தாரா.

மேலும், இந்த படத்தின் கதை ஒரே நாளில் நடப்பது போல் படமாக்கப்பட்டிருக்கிறது.அதாவது முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வராக நடித்த அர்ஜூன், அந்த ஒருநாளில் மக்களுக்கு எந்த மாதிரியான சேவைகளை செய்தாரோ அதேபோல், இந்த படத்தில் ஒரு மாவட்ட கலெக்டராக ஒரேநாளில் நயன்தாரா என்னென்ன மக்கள் சேவை செய்கிறார் என்பதை மையப்படுத்தி இந்த படத்தை கோபி இயக்கியிருக்கிறார்.டோரா படத்தில் நடித்துக்கொண்டே இந்த படத்திலும் சத்தமில்லாமல் நடித்து வந்த நயன்தாரா தனக்கான போர்ஷனை முடித்துக்கொடுத்து விட்டாராம்.