Cine Bits
அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர் கிறிஸ் பிராட் !

கிறிஸ் பிராட்டும், ஹாலிவுட் நடிகை அன்னா பாரிசும் காதலித்து 2009–ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஜேக் என்ற 6 வயது மகன் உள்ளான். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிறிஸ் பிராட்டும், அன்னா பாரிசும் கடந்த வருடம் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் மகள் கேத்தரினை கிறிஸ் பிராட் காதலித்து வந்தார். கேத்தரின் எழுத்தாளராக உள்ளார். தற்போது கலிபோர்னியாவில் உள்ள மொன்டிசிட்டோ நகரில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் அர்னால்ட் தனது மனைவி மரியாவுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.