அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த பாலனை நெகிழ வைத்த ஜீ.வி.பிரகாஷ் !

வெயில்’ படத்தில் இதே வசந்த பாலனால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து அவரே இசையமைக்கும் ‘ஜெயில்’ படத்தை வசந்த பாலன் இயக்கி முடித்திருக்கிறார். இதன் பின்னணி இசைக்கோர்ப்பு தற்போது நடந்து வருகிறது. இது குறித்து தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள வசந்த பாலன், …ஜெயில் திரைப்படத்தின் கடைசி ரீலுக்கான பின்னணி இசை எழுதும் வேலை இன்றிரவு இப்போது தான் முடிந்தது.இப்போது தான் வீடு திரும்பி நீர்மையின் கைகளில் என்னை நான் ஒப்படைத்து விட்டு அமர்கிறேன்.ஜீவியின் விரல்களில் வழிந்த இசை என் ஆழ்மன உணர்ச்சியை ஆழம் பார்த்தது.ரசிகனையும் விடாது. தவிர்க்கமுடியாத விசையொன்றால் ஈர்க்கப்படுபவனைப்போல் இசையின் சுழற்சியில் மனம் முன்னும் பின்னும் பம்பரமாய் சுழன்றாடியது. என் இசையின் மொழி ஜீவிக்கு எளியதாக புரியும் என கூறியுள்ளார்.