அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் தேதிகள் அறிவிப்பு !

ஜேம்ஸ் கேமரூனின் கனவு படமான அவதார் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தை தொடர்ந்து அவதார் படத்தை பல வருட தயாரிப்புக்கு பின் எடுத்தார் ஜேம்ஸ். இத்தனை வருட காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை. சுமார் 2.7 பில்லியன் டாலர் சம்பாதித்தது. இந்நிலையில் அவதார் படத்தில் மேலும் நான்கு பாகங்களை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக 2010ஆம் ஆண்டு அறிவிப்பு செய்தது. அவதார் 2 – 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. அவதார் 3 – 22 டிசம்பர் 2023, அவதார் 4 – 19 டிசம்பர் 2025, அவதார் 5 – 18 டிசம்பர் 2027 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.