அவர் இல்லாமல் ஆதித்யா வர்மா இல்லை – தந்தைப்பற்றி துருவ் விக்ரம் நெகிழ்ச்சி !

விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஆதித்யா வர்மா'. தற்போது இதன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் துருவ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் ஆதித்யா வர்மா படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடிக்கிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'ஆதித்யா வர்மா அழகான வி‌ஷயமாக உள்ளது. இது போல் என் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அவன்தான் எனக்கு வாழ்க்கைப் பற்றிய அர்த்தத்தை, காரணத்தை, என்னைப் பற்றிய தெளிவை, மிக முக்கியமாக எப்படி விட்டுக்கொடுக்காமல் போராடவேண்டும் என்பதையும் கற்று தந்தான். இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள அனைவரையும் எனது அன்பை செலுத்துகிறேன். குறிப்பாக வீடியோவில் கடைசியாக இடம்பெற்றவருக்கு, அவர் இல்லாமல் இது நடந்திருக்காது என்று பதிவிட்டுள்ளார்.