Cine Bits
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரூ.9000 கோடி வசூல் !

ஹாலிவுட் படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை பார்க்க உலகம் முழுவதும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பியது. தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் ரூ.9 ஆயிரம் கோடி வசூல் ஈட்டி சாதனை நிகழ்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பெற்றுள்ளது. இந்த படம் ரூ.2 ஆயிரத்து 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.