அவெஞ்சர்ஸ் படத்தில் இணைந்த விஜய்சேதுபதி
உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மார்வெல் சீரியசில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் அந்தமை உருவாக்கி இருக்கிறார். இந்த பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் கலந்துக் கொண்டனர். விஜய்சேதுபதி இப்படத்தில் அயன்மேனுக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அதுபோல், பிளாக் விடோவிற்கு ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்துள்ளார்.