ஆக்சிஜன் படத்தில் மூன்று கெட்அப்களில் நடிக்கிறார் அசோக் செல்வன்.

அசோக் செல்வனுக்கு  சினிமாவில் எப்படியேனும் ஜெயிக்க வேண்டும் என்று எப்படி எப்படியோ நடித்து பார்க்கிறார். ஆனால்  ஒன்றும்  கைக்கொடுத்தவில்லை. இவர்  சூர்யாவுக்கு  ஆதரவாக பேசுவதாக நினைத்துக்  கொண்டு மீடியாக்களை  சாடி வருகிறார். லக்ஷுமி  ராமகிருஷ்ணன்  இவரை வைத்து  “ஹவுஸ் ஓனர்” என்ற படத்தை இயக்க ஆரம்பித்து, அந்த படம்  பைனான்ஸ்  பிரச்சனை   காரணமாக  அப்படியே முடங்கிப்போனது.

இதனால் அப்செட்டான இவர்  தனக்கு நெருக்கமானவர்களிடம்  வாய்ப்பு தேடும்  பணியில் ஈடுபட்டார். அதற்கு பலனாக  “மெட்ரோ” படத்தை இயக்கிய  ஆனந்த்  கிருஷ்ணன்  இயக்கும்  அடுத்தப்படத்தில்  இவர் நடிப்பதற்கு  வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு ” ஆக்சிஜன் ”  என்ற டைட்டில் வைத்து  “ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்” நிறுவனம்  தயாரிக்கிறது. இவர் இதில்  மூன்று கெட் அப்களில்  நடிக்கிறாராம் .