Cine Bits
ஆக்ஷன் படத்தில் இணையும் சிம்ரன் – திரிஷா!

ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் திரிஷா. திருமணமாகி சினிமாவில் இருந்து ஒதுங்கிய சிம்ரன் சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடித்தார். பின்னர் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்து இருந்தார்.
‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்தபடத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்ஷன் சாகச படத்தில் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.