ஆங்கில படத்தில் நடிக்கும் பார்த்திபன் !

கடந்த ஆண்டு பார்த்திபன் தயாரித்து, இயக்கி,நடித்து வெளியான படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து இரவின் நிழல் என்ற படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் பார்த்திபன்.  இந்நிலையில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தைப் பார்த்த ஹாலிவுட் இயக்குநர் ஒருவர் பார்த்திபனை ஆங்கிலப் படத்தில் நடிப்பதற்காக அழைத்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பார்த்திபன், 2.02.2020 இன்றைய தேதியின் வி(சேஷ)சேதி.. விஜய் சேதுபதியின் பாதியாக நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’. அமேசானின் புஷ்கர் காயத்ரி வழங்கும் ‘சுழல்’என்ற வெப் சீரிஸ்,சிம்ரனின் சொந்தப்படம். எழில் இயக்க ராஜேஷ் குமாரின் நாவலில் நடிக்கும் படம். சமீப பிரபல இயக்குனரின் படம். மற்றும் என் ‘இரவின் நிழல்’.  இவையன்றி இவ்வருட கடைசியில் ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும். ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தைப் பார்த்த ஹாலிவுட் இயக்குநரின் அழைப்பில் மார்ச் மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் செல்கிறேன்.