Cine Bits
ஆடுகளத்திற்கு பிறகு இணைந்திருக்கும் தனுஷ் ஜி.வி.பிரகாஷ் !
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இடம் பெறும் ‘பொல்லாத பூமி' என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்திருக்கிறார். அசுரன் திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷின் ஜெயில் படத்திலும் தனுஷ் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.