“ஆடுஜீவிதம்” படத்தில் அமலாபால்….

நடிகை அமலாபால் மலையாள சினிமாவில் பிரபல இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் “ஆடுஜீவிதம்” படத்தில் பிருத்விராஜ்க்கு மனைவியாக நடிப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த படம் அரபு நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒரு இளைஞனின் பரிதாப வாழ்க்கையும் அங்கிருந்து தப்பிக்க துடிக்கும் அவனது போராட்டம் தான் படத்தின் கதை. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்று ஒரு பேட்டியில் இயக்குனர் “அமலாபால் தான் எனது 'சைனு' கதாபாத்திரதிற்கு பொருத்தமாக இருப்பார். அவரது மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும். அவரின் திறமையை “மிலி” படத்திற்கு பிறகு மலையாளத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் அவரது திறமைக்கு தீனிபோடும் கதாபாத்திரத்தை யாரும் கொடுக்கவில்லை” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.