ஆடை படத்திற்கு இரவு பகல் தூங்காமல் உழைத்ததற்கு கிடைத்த பரிசு !

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஆடை. வித்தியாசமான கதையம்சத்துடன் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்த உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் தான் அமலா பால் நிர்வாண காட்சியில் நடித்துள்ளார். இது பெரும் சர்ச்சையான நிலையில், இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வந்தனர். மேலும், படத்தை தடை செய்யக்கோரியும் முழக்கமிட்டனர். எனினும், அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், ஆடை படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்காக தூங்காமல் தான் தொடர்ந்து 5 நாட்கள் பணியாற்றியதாக இயக்குனர் ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும், 6ஆவது நாட்கள் வீட்டிற்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த போது எனது அன்பு மகள் குரனியாள் எனது முதுகில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது, எனது மனைவி அதனை புகைப்படம் எடுத்து என்னிடம் காண்பித்தாள். எனது லிட்டில் இளவரசி குரனியாள் அழகாக என்மீது படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.