ஆடை படத்தில் நடித்ததால் வரிசையாக படவாய்ப்புகளை இழக்கும் அமலாபால் !

மேயாதமான்' ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. இப்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. ஆனால், படத்தைப் பார்த்தவர்கள் அதில் விரசமில்லை, மிகவும் போல்டாக அமலாபால் நடித்துள்ளார் எனப் பாராட்டி வருகின்றனர். திரைப் பிரபலங்களிடமும், ரசிகர்களிடம் நல்ல விதமான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் அமலாபாலும், ஆடை படக்குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆடை படத்தால் போல்டான நடிகை என்ற பேர் கிடைத்துள்ள போதும், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இழந்து வருகிறார் அமலாபால். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்ததாலேயே விஜய் சேதுபதி படத்தில் இருந்து தன்னை தூக்கி விட்டதாக அவர் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி, சசிலலிதா எனும் பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் முன்னதாக சசி கதாபாத்திரத்தில் அமலாபாலை தான் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருந்ததாம். ஆனால், ஆடை படத்தில் நடித்ததால் தற்போது அந்த முடிவை ஜெகதீஸ்வர ரெட்டி மாற்றிக் கொண்டுள்ளார்.