ஆடை படம் பற்றி விவாதம் செய்ய அமலாபாலுக்கு லட்சுமிராமகிருஷ்ணன் அழைப்பு !

ஆடை படம் தொடர்பாக விவாதம் நடத்த தயாரா என நடிகை அமலா பாலுக்கும் இயக்குநர் ரத்னகுமாரும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார். இதனால் படத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஒரு சிலர் தமிழ் சினிமாவில் முதன் முறையாக உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நடித்த அமலா பாலின் துணிச்சலை பலர் பாராட்டினர். நடிகை அமலா பாலுக்கு படத்தை பார்த்தவர்களும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் படம் குறித்து நல்ல கருத்துக்களே பதிவாகி வருகின்றன. எனவே அமலாபாலுக்கு இயக்குனர் ரத்னகுமாருக்கும் ஆடை படம் அமலா பாலின் திரைப்பயணத்தில் நிச்சயம் ஒரு மைல் ஸ்டோனாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆடை படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை அமலா பாலையும் இயக்குநர் ரத்னகுமாரையும் ஆரோக்கியமான விவாதத்திற்கு அழைத்துள்ளார்.