ஆட்டோ தொழிலாளர்களுக்கு உணவு, பரிசு பொருட்கள் அளித்த விஜய்!

தளபதி விஜய் ஒவ்வொரு ஆண்டும் உழைப்பாளர் தினத்தன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்தளிப்பார். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் காரணமாக நேற்று முன்தினம் விருந்தளித்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளவில்லை. தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத கால்பந்தை விளையாட்டை மையமாக கொண்ட படத்தில் நடித்து வருகின்றார். நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த பிரமாண்ட விருந்தில் எப்போதும் நேரடியாக கலந்து கொள்ளும் விஜய், இந்த முறை படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவர் கலந்துகொள்ளவில்லை.