Cine Bits
ஆணாக இருந்து பெண்ணாக மாறும் சர்ச்சையான கதாப்பாத்திரத்தில் அடா ஷர்மா !

தமிழில் நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த, 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும், 'சார்லி சாப்ளின் 2 ' படத்திலும் நடித்தவர் நடிகை அடா ஷர்மா. தமிழில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது, Man to Man என பெயரிடப்பட்டுள்ள ஹிந்தி படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.