ஆண்ட்ரியாவை புகழ்ந்து சவுந்தர்யா ரஜினி

ரஜினியின் இளைய மகளும் இயக்குனருமான சவுந்தர்யா டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் தற்போது நடிகை ஆண்ட்ரியாவை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதில், நாம் எத்தனை பேரை நண்பர்களாக வைத்திருக்கிறோம் என்பது வி‌ஷயமல்ல. எத்தனை பேர் நம்மிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பதுதான் வி‌ஷயமே. அந்த வகையில், வாழ்க்கை முழுவதுக்கும் உண்மையான நட்பாக இருக்கும் ஒருவரைப் பெற்றிருக்கிறேன்’ என புகழ்ந்து இருக்கிறார். சவுந்தர்யாவும் ஆண்ட்ரியாவும் இதுவரை இணைந்து பணியாற்றியதில்லை. பார்ட்டிகளுக்கு செல்லும்போது இருவரும் நெருங்கிய தோழிகளாகி இருக்கிறார்கள் என்கின்றனர்.