ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இளம் நடிகைகள் !

சுமார் 1222 குழந்தைகள் ‘ஆனந்த தீபாவளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  குழந்தைகளுடன் வளர்ந்து வரும் நடிகைகளான இந்துஜா, அதுல்யா ரவி இணைந்து தீபாவளி கொண்டாடினர். பின்னர் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இந்தப் படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி கிருத்திகா உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார். நிகழ்வில் பேசிய நடிகை அதுல்யா ரவி, உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும் என்றார்.