ஆதி நடிப்பில் வெளியாகவிருக்கும் கிளாப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஈரம் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற ஆதி, தற்போது இளையராஜா இசையமைக்கும் படமொன்றில் நடித்து வருகிறார். கிளாப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தடகள வீரனாக நடிக்கிறார் ஆதி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. கதாநாயகியாக ஆகன்ஷ்கா சிங் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிருத்வி ஆதித்யா இயக்குநராக அறிமுகமாகிறார். படப்பிடிப்புப் பணிகள் விரைவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது