ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் – செல்வராகவன்

செல்வராகவன் படங்கள் தனித்துவமான படைப்பாக இருக்கும். காலம் கடந்து இவரது படங்கள் பேசப்படும் என்பதற்கு புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் சாட்சி. தற்போது ரீரிலிஸ் ஆகி கூட அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனது, இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையும் பேசப்பட்டது. சமீபத்தில் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு யார் இசையமைப்பாளர்? என்று கேட்டனர். அதற்கு அவர் கண்டிப்பாக ஜி.வி தான், ஏனெனில் அது அவருடைய படைப்பும் கூட என பதில் அளித்துள்ளார்.