ஆர்ஆர்ஆர் படத்துடன் மோத இருக்கும் மற்றுமொரு பிரமாண்டம்!

பாகுபலியின் இரண்டு பாகங்கள் மூலமாக இந்திய முழுவதும் பிரபலமான இயக்குனர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. ஜூனியர் NTR, ராம்சரண், ஆலியாபட் என முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படிப்பட்ட பிரமாண்ட படத்துடன் எந்த படமும் மோதாது என்று நினைக்கும் நேரத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் சல்மான்கானின் இன்ஷால்லா என்ற படம் அதே தேதியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜமௌலியை போல் இந்தி சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. இதுகுறித்து சல்மான்கான் 20 வருடங்களுக்கு பிறகு நானும் சஞ்சய்யும் மீண்டும் இன்ஷால்லா படத்தின் மூலம் இணைந்துள்ளோம் என குறிப்பிட்டிருந்தார்.