ஆர்ஜிபி லேசர் வசதி கொண்ட புரஜெக்டர் நேர்கொண்ட பார்வைக்காக – மாஸ் காட்டும் திரையரங்கம்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் படத்துக்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்று முதல் படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள ஜிகே சினிமாஸ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் முதல் ஆர்ஜிபி லேசர் வசதிகொண்ட புரஜெக்டரை நேர்கொண்ட பார்வை படத்துக்காக நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அத்திரையரங்கின் நிர்வாக மேலாளர் ரூபன் மதிவாணன் நம்மிடையே “உலகின் மிகவும் பிரசித்த பெற்றதாக கருதப்படும் இந்த புரஜெக்டரில் துல்லியமான கலர் மற்றும் 3டி அனுபவங்கள் கிடைக்கும் என்றும், இந்த தொழில்நுட்பத்தில் படம் பார்ப்பது இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.