Cine Bits
ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் வெளியானது

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளபக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளது.இந்நிலையில், சமீபத்தில் வெளியான 'ஹரஹர மகாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமார் இந்த படத்தையும் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக 'வனமகன்' நாயகி சாயிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த படத்திற்கு 'கஜினிகாந்த்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த முழு விபரம் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.