Cine Bits
ஆர்யாவிற்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார் சிம்பு!

கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில், ஆர்யாவுக்கு வில்லனாக சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ள புதிய படமொன்றில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படத்தில் நாயகனாக அல்ல, வில்லனாக நடிக்க இருக்கிறாராம். கன்னடத்தில் சிவராஜ்குமார், ஶ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற 'மஃப்டி' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக சிம்பு நடிக்க, நாயகனாக ஆர்யா போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.