ஆர்யா, சயீஷா திருமண வரவேற்பு!

ஆர்யா, சயீஷாவின் திருமணம் கடந்த 10ம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள், செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்யா கோட் சூட் அணிந்து இருந்தார். சயீஷா திருமணத்தை போன்றே வரவேற்பு நிகழ்ச்சிக்கும் சிம்பிளாக அழகாக சிவப்பு நிற உடை அணிந்திருந்தார். நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தி மற்றும் நடிகர் பரத் ஆகியோர் ஆர்யாவின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டனர்.