ஆர்யா சின்னத்திரைக்கு ….

நடிகர் ஆர்யா கேரளாவை சேர்ந்தவர். இவர் “அறிந்தும் அறியாமலும்” படத்தில் அறிமுகமாகி நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை என 40 படங்கள் நடித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் வேகமாக வளர்ந்து வந்தவர். ஆனால் தற்போது நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை, விஎஸ்ஓபி, யட்சன், இஞ்சி இடுப்பழகி, பெங்களுரு நாட்கள், கடம்பன் என்ற படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது அவர் “சந்தனத் தேவன்” கஜினிகாந்த்  படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலர்ஸ் சேனலில் ஸ்டார் அட்ராக்ஷன் ஆர்யா தான். இவர் சேனலின் விளம்பர தூதராகவும், அதே சேனலில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு வந்துள்ளார். இந்த நாடகம் இன்று துவங்க உள்ளது. இது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் இவருக்கு சுயம்வரம் பணியில் பெண்தேடி வெற்றி பெறுபவரை இவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறுகிறார்கள்.