ஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் !

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரணுடன் அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதேபோல் பாலிவுட் நடிகை அலியா பட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில், அவர் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு அடுத்தடுத்து தள்ளிப்போவதாலும், கால்ஷீட் பிரச்சனை ஏற்படும் என்பதாலும் இப்படத்திலிருந்து அவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.