Cine Bits
ஆர்.கே.நகர் ரிலீஸ் தேதியை அறிவித்த வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள 'ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரவிருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.