ஆலம்பனவாக கலக்கவிருக்கும் முனீஸ்காந்த் !

'சிக்ஸர்' படத்தைத் தொடர்ந்து 'லாக்கப்', 'காட்டேரி', 'டாணா' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வைபவ். தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற படம் தமிழக மக்களிடையே பிரபலம். அதே பாணியில் உருவாகும் படத்தில்தான் வைபவ் நடிக்கவுள்ளார். புதுமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கவுள்ளார். இவர் 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் துணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர். இதில் பார்வதி நாயர், முனீஸ்காந்த், திண்டுக்கல் ஐ.லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வைபவ் நடிப்பில் உருவான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் இதில் ஆலம்பனவாக அதாவது பூதமாக கலக்கப்போவது முனீஸ்காந்த்.  இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி, ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக கோபி ஆனந்த் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரியவுள்ளனர்.