ஆல்யா மானஸாவுக்கும், சஞ்சீவுக்கும் விரைவில் திருமணம் !

ரீல் ஜோடிக்கள், ரியல் ஜோடிகளாக மாறுவது தமிழ் சினிமாவிற்கும், சின்னத்திரைக்கும் புதிதல்ல. திரையில் ஜோடியாக நடித்தவர்கள், நிஜத்திலும் தம்பதிகளாக மாறுவதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அந்தவகையில், சின்னத்திரை வட்டாரத்தில் மக்களிடம் பெரும் அபிமானத்தைப் பெற்ற ஜோடி தான், ராஜா ராணி சீரியலில் நாயகன், நாயகியாக நடித்து வரும் ஆல்யா மானஸா, சஞ்சீவ் ஜோடி. விருது வழங்கும் விழா நிகழ்ச்சி புரோமோக்களில் அழகிய வெள்ளை உடையில் ஆல்யா நிற்பது போலவும், அவருக்கு சஞ்சீவ் மோதிரம் அணிவிப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் அவர்களது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.