ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய – ராணா !

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி படத்தில் வில்லான நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் நல்ல உடற்கட்டுடன் இருந்த ராணாவை தற்போது பார்ப்பவர்களால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை. காரணம் மனிதர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக உள்ளார். அவர் உடம்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. வேணு உடுகுலா இயக்கி வரும் விரத பர்வதம் 1992 படத்திற்காக தான் இப்படி ஒல்லிக்குச்சியாகியுள்ளார்.