ஆஸ்கார் விருது போட்டிக்கு 11 பிரிவுகளுக்கு ஜோக்கர் படம் பரிந்துரை !

ஹாலிவுட்' படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, ஆண்டு தோறும் அமெரிக்காவில் நடக்கிறது. இதன்படி, 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்.,10ம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் விருதுக்கான படங்களின் பரிந்துரை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், டாட் பிலிப்ஸ் இயக்கத்தில், ஜோக்குயின் போனிக்ஸ் நடிப்பில் வெளியான ஜோக்கர்(Joker) திரைப்படம் அதிகபட்சமாக 11 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த தழுவல் திரைக்கதை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் ஜோக்கர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தி ஐரிஷ்மேன்(The Irishman), ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட்(Once Upon A Time… In Hollywood) மற்றும் 1917 ஆகிய படங்கள் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேரேஜ் ஸ்டோரி(Marriage Story), பாராசைட்(Parasite), லிட்டில் வுமன்(Little Women), ஜோஜோ ரேபிட்(Jojo Rabbit) ஆகிய படங்கள் தலா 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.