ஆஸ்திரேலியா இந்திய திரைப்பட விழா – விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது !

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடந்து வருகிறது. வருகிற 15-ந் தேதி வரை இந்த விழா நடக்கிறது. இதில் 60 படங்கள் பங்கேற்கின்றன. விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஷாருக்கான், அர்ஜுன் கபூர், நடிகைகள் காயத்ரி, தபு, டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இதில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. படத்தில் அவர் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவர் நடிப்புக்கு ஏற்கனவே பாராட்டுகள் கிடைத்தன. இப்போது சிறந்த நடிகர் விருதையும் பெற்றுள்ளார்.