ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர்!

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஒரு போலீஸ்காரர் அவரிடம் மிக ரூடாக பேசியுள்ளார். இது தனக்கு எட்டாவது முறையாக நடந்துள்ளது. தோற்றத்தை வைத்தே ஒருவரை பற்றி சந்தேகப்படுவது நிறுத்தப்படவேண்டும் என  ட்விட்டரில் தன் ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.