இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து பயணிக்கும் நிறுவனம் !

விஜய் குமார் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் ‘உறியடி 2’. சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அதில் பேசிய சூர்யா, நான் நடிக்கும் படத்தின் வெளியீடு தாமதமாகிக் கொண்டே போனாலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களைச் சந்திப்பது சந்தோஷமாக இருக்கிறது. கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்குதான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைச் சந்தித்தேன். அவருடைய இசையையும் வீடியோவையும் பார்த்தேன். அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனால், அவர் இவ்வளவு தெளிவாகப் பேசியது எனை ஈர்த்தது எனவே இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2டி நிறுவனம் பயணிக்கும் என சூர்யா தெரிவித்துள்ளார்.