இசை கலைஞர்களை பற்றி தெரிந்துகொண்ட மாதவன்

தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மிக சில ஒருவரில் நடிகர் மாதவனும் ஒருவர். அவரது பரிமாணத்தில் வெளியான அன்பே சிவம், ரன், ஆயுத எழுத்து போன்ற படங்களே சான்று. அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் நிசப்தம் திரைப்படத்தில் நடிகர் மாதவன் அந்தோணி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக மாதவன் நிஜ இசைக்கலைஞர்களை சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை நடைமுறைகளையெல்லாம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.