இசை வழியாக அடுத்த தலைமுறையை நல்வழி படுத்துவோம் – ஏர்.ஆர். ரஹ்மான் !

‘தமிழ் கலாசாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக ‘த பியூச்சர்ஸ்’ என்ற புதிய கலை அமைப்பை தொடங்கியுள்ளார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில் இந்தக்கால குழந்தைகள் யு டியூப் வழியாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்கின்றனர். அதன்மூலமாக நமது பண்பாடு, கலாச்சாரம், நற்பண்புகள் ஆகியவற்றை அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை இந்த அமைப்பு மேற்கொள்ளும். குறிப்பாக, குழந்தைகள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் தடுத்து, அவர்களை இசை வழியாக நல்வழிப்படுத்த முயற்சிப்போம். இயக்குனர் பரத் பாலா, எம்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் இந்த பணியில் என்னுடன் கைகோர்த்துள்ளனர்’ என்றார்.