இடைவேளை கிடையாது பாடல் கிடையாது – சிம்பு

சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'AAA' படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இப்படத்திற்கு பிறகு பல வருடங்களுக்கு முன்பு டிராப் பண்ணப்பட்ட கெட்டவன் படத்தை தூசு தட்டி வருகிறார். இதுகுறித்து சிம்பு தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது…. “கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிலம்பரசன்.டி.ஆர். படம். 7 முறை விழுந்து விட்டேன், 8-வதாக எழுவேன்; படத்தின் பெயர் மற்றும் இதர விவரங்கள் விரைவில்…” என்று கூறியுள்ளார் சிம்பு.

இன்னொரு டுவீட்டில்… இந்தப்படத்தில் பாடல்கள் கிடையாது, இடைவேளை கிடையாது. படம் ஆரம்பிக்கும் முன்பே, பார்ப்கான், டிரிங்ஸ் வாங்கிவிடுங்கள். செப்டம்பர் 2017-ல் படம் வெளியீடு என்று கூறியுள்ளார்.