இணையத்தில் வெளியானது ஒத்த செருப்பு – பார்த்திபன் அதிர்ச்சி !

பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் அவர் மட்டுமே நடித்துள்ளார். வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். எனவே, இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. புதுப்படங்கள் தியேட்டர்களில் வெளியான சில மணி நேரங்களில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுகின்றன. இதனை தடுக்க அரசு தரப்பிலும், திரைத்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், இது குறைந்தபாடில்லை. அந்தவகையில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 படமும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியது. இது தொடர்பாக பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியான்னு தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது என பதிவிட்டுள்ளார்.