இதனால் தான் நான் பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை- நடிகை பூஜா தேவாரியா !

பிக்பாஸ் தமிழின் 3வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. கமல் தொகுத்து வழங்கவுள்ள இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் தற்சமயம் நடைபெற்று வருகிறது. மேலும் இதில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இறைவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பூஜா தேவாரியா, கடந்த அனைத்து சீசன்களிலும் பிக்பாஸில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் தான் ஒத்துகொள்ளவில்லை என கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், எனக்கு அடுத்தவர் முன் தூங்குவது, ப்ரஷ் செய்வது எல்லாம் பிடிக்காது. அதற்காக அதில் கலந்து கொள்பவர்களை இழிவாக நினைக்கவில்லை. இவ்வாறாக பூஜா தேவாரியா கூறினார்.