Cine Bits
இந்தியன் தாத்தாவிற்கு ஜோடியாக வயதான தோற்றத்தில் காஜல் அகர்வால் !

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'இந்தியன்'. இந்த படத்தில் சேனாபதி என்ற சுதந்திரப்போராட்டத் தியாகியாக கமல் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களுக்கு பிறகு 'இந்தியன் 2' என்ற பெயரில் உருவாகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் கமல்ஹாசனின் மனைவியாக 85 வயது மதிக்கத்தக்க வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.