Cine Bits
இந்தியன் 2; கமல், நயன்தாரா.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெறு வருகிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அவர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பை வெளியிடும் விதமாக தைவானில் சிறிய ரக பலூனை பறக்கவிட்டார்.இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்க கமல் இதுவரை நடித்த படங்களில் இது அதிக பட்ஜெட் என்கிறார்கள். இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.நயன்தாரா சம்மதித்தால், கமலுடன் முதன் முறையாக இணையும் படமாகவும், இதில் அவருக்கு ஒரு புரட்சி பெண் வேடமாகவும் இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமின்றி வடிவேலும் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.